முத்துப்பேட்டை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 22

முத்துப்பேட்டை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலி.


பிப்ரவரி 22: முத்துப்பேட்டை அருகே உள்ள பெருவிடைமருதூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் ராமையன் மகன் வினித்(15). இவர் அருகில் உள்ள பள்ளிக் கூடத்தில் 7–ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மரத்தில் ஏறி கிளியை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மரம் எதிர்பாராதவிதமாக முறிந்து கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அவரது சத்தத்தை கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மாணவன் வினித்தை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அவர் படித்த பள்ளி மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here