ஜனவரி 14: திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு அரசு பஸ் வந்தது. இதனை எடையூரை சேர்ந்த டிரைவர் வீரமணி ஓட்டி வந்தார். கண்டக்டராக சித்தாளந்தூரை சேர்ந்த வீரமணி இருந்தார். இந்த பஸ் வேப்பச்சேரி பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தது.
பின்னர் டிரைவர் பஸ்சை எடுக்க முயன்றார். அப்போது பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேப்பச்சேரியை சேர்ந்த பிரபாகரன், வினோத் ஆகியோர் நின்றனர்.
இதனால் பஸ் டிரைவர் வீரமணி கீழே இறங்கி மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றார். இதனை வினோத், பிரபாகரன் ஆகியோர் தடுத்தனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு உருவானது. உடனே கண்டக்டர் வீரமணி இறங்கிசென்று தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், வினோத் ஆகியோர் அருகில் இருந்த கரும்பை எடுத்து பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கினார்கள்.
அவர்கள் எடையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.


No comments:
Post a Comment