முத்துப்பேட்டை அருகே கலெக்டர் 'ஷூ'வை ஒரு மணி நேரம் கைகளில் தாங்கிய உதவியாளர். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 14

முத்துப்பேட்டை அருகே கலெக்டர் 'ஷூ'வை ஒரு மணி நேரம் கைகளில் தாங்கிய உதவியாளர்.


ஜனவரி 14: முத்துப்பேட்டை அருகே கலெக்டர் 'ஷூ'வை ஒரு மணி நேரம் கைகளில் தாங்கிய உதவியாளர்.
முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராமத்தில் நடந்த மகளிர் சபை கூட்டத்தில் பங்கற்ற கலெக்டர் நடராஜனின் ஷூவை அவரது உதவியாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, கையில் ஏந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராமத்தில் பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு குறித்த மகளிர் சபை கூட்டம் நடந்தது. கலெக்டர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மகளிர் கிராம சபை கூட்டம் என்பதால் அனைவரும் தரையில் அமர்ந்து கூட்டம் நடத்தினர். கலெக்டர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி தன் உதவியாளர் ராஜகோபாலிடம் கொடுத்தார். உதவியாளர் ஷூவை கீழே வைக்காமல் ஒரு மணி நேரமாக கையிலேயே வைத்திருந்தார். இதை பார்த்தவர்கள், 'என்ன சார், ஏதாவது 'பனிஷ்மென்டா' எனக் கேட்க, அவர் தலைகுனிந்து கொண்டார். இக் காட்சியை பத்திரிகையாளர்கள் படம் எடுப்பது தெரிந்ததும், அதிகாரியின் பொருளை பாதுகாப்பதுதான் உதவியாளரின் கடமை என கூறி சமாளித்தார். பின்னர் கூட்டம் முடிந்ததும் ஷுவை மாட்டிக்கொண்டு கலெக்டர் புறப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here