சிங்கப்பூரில் பஸ் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பலி! போலீசாருக்கும் தமிழர்களுக்கும் இடையே பயங்கர மோதல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, December 9

சிங்கப்பூரில் பஸ் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பலி! போலீசாருக்கும் தமிழர்களுக்கும் இடையே பயங்கர மோதல்.



டிசம்பர் 09: சிங்கப்பூரில் பஸ் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பலி! போலீசாருக்கும் தமிழர்களுக்கும் இடையே பயங்கர மோதல். 
சிங்கப்பூரில் இந்தியா, பங்களாதேஸ், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக சென்றுள்ளனர். ஞாயிற்றுக் கிழமைகளில் தேக்கா என்ற இடத்தில் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள். அந்த இடம் பெரிய சந்தைப் பகுதியாகவும் உள்ளது. ஒரு வாரத்திற்கு வேண்டிய பொருட்களை நாடெங்கும் பரவியுள்ளவர்கள் வந்து பொருட்கள் வாங்கிச் செல்வதுடன் சொந்த நாட்டில் இருந்து அங்கு வேலைக்கு வந்துள்ள நண்பர்களைச் சந்திக்கவும் கூடுவார்கள்.

வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமையும் தேக்காவில் அதிகமானோர் கூடினார்கள். அந்த நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு 40 வயதுள்ளவர் ஒரு தனியார் பேருந்தில் ஏறியபோது அதில் இருந்த பெண் ஓட்டுநர் அந்த பயணியை தள்ளிவிட்டதாக தெரிகிறது. அதனால் கீழே விழுந்த அந்த தமிழ் பயணி அதே இடத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதைப் பார்த்த அப்பகுதியில் நின்ற தமிழர்கள் அந்த பேருந்தை உடைக்க முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த சிங்கப்பூர் போலீசாருக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனால் அங்கு நின்ற இரண்டு போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் அங்கு வந்த ஒரு ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் தமிழர்கள் மீது தடியடி நடத்தி களைத்தனர். இந்த சம்பவம் கலவரம் போல் காட்சியளித்தது,
அதனைத் தொடர்ந்து இதுவரை 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்பதால் நாடே பரபரப்பாக உள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி சொந்த நாடுகளுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிங்கப்பூர் - இந்தியா விமானம் ரத்து செய்யும் நடவடிக்கையும் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அறைகளிலேயே தவித்து வருகின்றனர்.

1 comment:

  1. பொதுசொத்தை சேதபடுத்துபவன் தண்டிக்கப்பட வேன்டும்

    ReplyDelete

Post Bottom Ad

Responsive Ads Here