முத்துப்பேட்டையில் குப்பையை அள்ள பேரூராட்சி நிர்வாகம் மறுத்ததால் குப்பையில் அமர்ந்து கவுன்சலரின் கணவர் தர்னா. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, December 13

முத்துப்பேட்டையில் குப்பையை அள்ள பேரூராட்சி நிர்வாகம் மறுத்ததால் குப்பையில் அமர்ந்து கவுன்சலரின் கணவர் தர்னா.








டிசம்பர் 13: முத்துப்பேட்டையில் பரபரப்பு, குப்பையை அள்ள பேரூராட்சி நிர்வாகம் மறுத்ததால் குப்பையில் அமர்ந்து கவுன்சலரின் கணவர் தர்னா. 
முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஜெய்புனிஷா பகுருதீன். இவர் வார்டு பகுதியில் அதிகமான குடியிருப்புகள் இருப்பதால் தினந்தோறும் அதிக அளவில் குப்பைகள் தெருக்களில் சேர்ந்து விடுகிறது. பேரூராட்சி நிர்வாகம் சரிவர அள்ளப்பட்வில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருந்துள்ளது. 
இந்த நிலையில் நேற்று காலை பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் எதிர்புறம் (புதுத்தெரு) நடுரோட்டில் மலைபோல் குப்பை கிடந்தது. இதனை அள்ள பேரூராட்சி சென்று ஜெய்புனிஷாவின் கணவர் திமுக பிரமுகர் பகுருதீன் கோரிக்கை வைத்துள்ளார். பணியாளர்கள் முறையான பதில் கூறவில்லை என தெரிகிறது. 
பின்னர் குப்பை கிடந்த இடத்திற்கு வந்து குப்பை மேல் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.பேரூராட்சிக்கு எதிரான கோசங்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூடியது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த அதே பகுதியைச் சேரந்த நிஜாமுதீன், கமால் முகம்மது, காதர் உசேன்ஈ சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் சமாதானப்படுத்தி இன்றைக்குள் குப்பைகளை அள்ளாவிட்டால் அனைத்து குப்பைகளையும் நாமே அள்ளி பேரூராட்சிக்குள் கொட்டுவோம் என்று அமர்ந்து இருந்தவரை தூக்கிச் சென்றனர். பலமணி நேரம் நடந்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்து 2 மணி நேரம் கழித்து நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தின. 

படம் செய்தி :

1. முத்துப்பேட்டை 6-வது வார்டு பகுதியில் குப்பை அள்ளாததை கண்டித்து கவுன்சிலரின் கணவர் குப்பையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்ட காட்சி.

2. சமாதான்படுத்தி தூக்கிய சிலர்.

3. சாலையில் படரந்து கிடக்கும் குப்பைகள்.

தகவல் : நிருபர் மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here