துபாயில் இன்று திடீரென மிதந்து வந்து திகைக்க வைத்த ராட்சத சைஸ் வாத்து! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 1

துபாயில் இன்று திடீரென மிதந்து வந்து திகைக்க வைத்த ராட்சத சைஸ் வாத்து!


டிசம்பர் 01: இன்று (ஞாயிற்றுக்கிழமை) துபாய் கிரீக் (DUBAI CREEK) பகுதிக்கு சென்றவர்கள், நீரில் ராட்சத சைஸ் வாத்து ஒன்று நீந்திக்கொண்டு இருந்ததை பார்த்திருக்கலாம். நிஜ வாத்து அல்ல, காற்றடிக்கும் ரப்பர் பொம்மை வாத்து அது. ஆனால், தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு உயரமானது, 18 மீட்டர் உயரம்!

‘தண்ணீர் சேமிப்பு’ பற்றிய கவனயீர்ப்பை ஏற்படுத்துவதற்காக இன்று மிதக்கவிடப்பட்டுள்ளது. அமீரகத்தின் மொபைல் கார் வாஷ் நிறுவனமான ஜியோவாஷின் ஐடியா இது.

திடீரென ராட்சத சைஸ் வாத்து மிதப்பதை கண்டு கரையில் நின்றவர்கள், படகுகளில் சென்றவர்கள் என பலரும் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

‘தண்ணீர் சேமிப்பு’ பற்றிய பிரசாரம் இது என்றாலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம் மற்றும், Expo 2020 நிகழ்வை அமீரகத்தில் நடத்துவதற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகியவற்றை கொண்டாடுவதும், இன்று வாத்து விடப்பட்ட மற்றைய காரணங்கள் என்று தெரிவித்துள்ளது, ஜியோவாஷ் நிறுவனம்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இந்த வாத்து திடீரென மிதக்க விடப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். அமீரகத்தை சேர்ந்த வாசகர்கள் திடீரென உங்களுக்கு அருகில் வாத்து தோன்றினால், அதிர்ச்சியடையாதீர்கள்.

சரி. எதற்காக அமீரகத்தில் ‘தண்ணீர் சேமிப்பு’ பற்றிய பிரசாரம் நடக்கிறது? சமீபத்தில் எடுக்கப்பட்ட கணிப்பின்படி, அமீரகத்தில் தனி நபர் சராசரியாக தினமும் 500 லீட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறாராம். உலக சராசரியுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகம். உலக சராசரி, தினமும் 170-300 லீட்டர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here