டிசம்பர் 02: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. வடகிழக்குப்பருவ மழை ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் வடகிழக்குப்பருவ மழை பலமாக பெய்யும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தபோதிலும் திருவாரூரில் வடகிழக்குப் பருவ மழை இன்னும் திவிரம் அடையவில்லை. வாரத்திற்கு ஒரு நாள் என்ற அளவிலேயே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காலையில் மிதமான வெயில், இரவில் கடுங்குளிர் நிலவுகிறது. பலத்த மழை பெய்ய வேண்டிய நேரத்தில் கடும்பனிப் பொழிவு இருப்பதால், வடகிழக்குப் பருவ மழையை நம்பிய காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தை ஒட்டிய வங்க கடலின் தென் மேற்கு பகுதியில் புதிய காற்ற ழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஒருவாரத்திற்குப் பிறகு நேற்று பரவலாக மழை பெய்தது.
நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்று அதிகாலை திருவாரூரில் பலத்த மழை பெய்தது. 2 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த மழை காரணமாக திருவாரூர் கீழ்ப்பாலம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதி களில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக முத்துப்பேட்டை கடல் பகுதிகளில் நேற்று லேசான சீற்றம் காணப் பட்டது. இதனால் தொண்டியக்காடு, மேலதொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், இடும்பாவனம், தில்லைவிளாகம், ஜாம்புவான்ஓடை, துறைகாடு, செம்படவன்காடு, பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மழை நிலவரம்:
நேற்று காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப் பூண்டி யில் அதிகபட்சமாக 35 மில்லி மீட்டர் பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவுகளில் வருமாறு:- திருவாரூர்:-3, முத்துப்பேட்டை:- 30, நன்னிலம்:- 5.

No comments:
Post a Comment