டிசம்பர் 04: முத்துப்பேட்டையைச் சேரந்தவர் நபில். ஆட்டோ டிரைவரான இவர் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு செம்படவன்காடு பெட்ரோல் பங்கில் போட்டுவிட்டு தனது நண்பர்கள் சலீம் மற்றும் அசரப் அலியுடன் மங்களுர் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நிலை தடுமாறி ஆட்டோ பைபாஸில் உள்ள வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் நபில் நண்பர்கள் சலீம், அசரப் அலி மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் நபில் நிலைமை மோசமானதால் திருவாரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். நண்பர்க்ள சலீம், அசரப் அலி இருவரும் முத்துப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
படம் செய்தி :
1. முத்துப்பேட்டை மங்களுர் பைபாஸ் சாலையில் வாய்க்காலுக்குள் கவிழ்ந்த ஆட்டோ
2. படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் நபில்.


No comments:
Post a Comment