நவம்பர் 27: ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினமான டிசம்பர் 2ம் தேதி அமீரகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் அபுதாபி, துபை, சார்ஜா, அஜ்மன், ராஸ்அல்கைமா, உம் அல் குயின், ஃபுஜைரா ஆகிய மாகணங்கள் அடங்கும்.
அமீரகத்தின் தேசிய தினம் வரும் டிசம்பர மாதம் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை வரும் தேசிய தினத்திற்கு தங்களுக்கு விடுமுறை கிடைக்குமா என்று ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் தேசிய தினத்தன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கு பதிலாக முன்கூட்டியே ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை உள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சனிக்கிழமை தேசிய தின விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை உள்ள நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேசிய தின விடுமுறை அளிக்கப்படுகிறது.
தகவல்: ANA HAJA


No comments:
Post a Comment