முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 27

முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை.


நவம்பர் 27: முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 60). இவருக்கு மனைவி பாலம்மாள்(55) மற்றும் 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். மகன்கள், மகள்களுக்கு திருமணமாகி விட்டது. பாலம்மாள் மகள் ஒருவரின் வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள மகன் ஒருவரின் வீட்டில் வசித்து வந்த சிவசங்கரன் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை முத்துப்பேட்டை அருகே உள்ள குறிச்சி என்ற ஊரின் பஸ் நிறுத்தத்தில் அவர் பிணமாக கிடந்தார். 
தகவலறிந்த பெருகவாழ்ந்தான் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், செங்குட்டுவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் அவர் பூச்சி மருந்து (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சிவசங்கரனின் உடலை கைப்பற்றிய போலீசார், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here