கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்.. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 6

கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்..



அக்டோபர் 06: கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்:-

தாயின் உடற்கூறின் காரணங்களும் கருச்சிதைவுக்கான காரணமாகின்றன. வைரஸ் நோய்த் தாக்குதல்கள், பாலியல் நோய்கள், நீண்ட நாள் காய்ச்சல் சத்துக்குறைவு, போலிக் அமில குறைபாடு, கருப்பை வளர்ச்சியில் குறைபாடு, கருப்பை வாய் தளர்ந்து போதல்... என்று கருச்சிதைவுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கருச்சிதைவை தடுக்க...

கருச்சிதைவை தடுக்க தற்போது பல்வேறு மருந்துகள் உள்ளன. கருப்பையின் சுருக்கத்தைப் போக்கவும், கருவின் வளர்ச்சியை மேம்படுத்தவும், இப்போது மருந்துகள் உள்ளன.

போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு நல்லது. சைவ உணவுகளில் போலிக் அமிலம் குறைவாகவே உள்ளது. எனவே, இந்தச்சத்துள்ள அசைவ உணவுகளை சாப்பிடுவதில் தவறில்லை.

ஒரு முறை கருச்சிதைவான பிறகு கருப்பையில் அந்த காயம் ஆற, நீண்ட நாட்கள் தேவைப்படுகிறது. எனவே, அடுத்த குழந்தை பேற்றுக்கு அவசரப்படாமல், கருப்பை பழைய ஆரோக்கிய நிலைக்கு திரும்பும் வரை தம்பதியர் காத்திருக்க வேண்டும்.

எனவே, பெண்கள் நல்ல ஓய்வில் இருக்க வேண்டும். நிம்மதியான சூழலில் கொஞ்ச நாள் கழிக்க வேண்டும்.

ஒரு கருச்சிதைவு நிகழ்ந்த பிறகு 6 மாதம் கழித்து தான் அடுத்த கருத்தரிப்பு பற்றி தம்பதிகள் யோசிக்க வேண்டும்.

கருச்சிதைவுற்று ஓய்வில் இருக்கும் காலக்கட்டத்தில் கடினமான வேலை எதையும் செய்யாமல் இருக்க வேண்டும். நீண்ட தூர பயணம், அடிக்கடி கோபப்படுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here