மே 02: (30-04-2012) காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து கேரளாவின் வர்த்தகத் தலைநகரான கொச்சி சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது.
அந்த விமானத்தில் 106 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் இருந்தனர். சென்னையிலிருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமான எந்திரத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இதை கண்டுபிடித்த விமானி. உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். விமானத்தை சென்னைக்கு திருப்பும்படி அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி விமானம் 11.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் உயிர் தப்பியது இறையருள் என்று மகிழ்ந்தனர்.

No comments:
Post a Comment