ஏப்ரல் 15: அமீரகத்தில் பல சமூக சேவைகளை செய்துவரும் எமிரேட்ஸ் இந்தியா ப்ரடர்நிட்டி ஃபோரம்(EIFF) வரும் ஏப்ரல் 20-ம் தேதி ‘ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.
இதுகுறித்து EIFF வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
இன்று நோயில்லாமனிதர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவையெல்லாம் இன்று சாதாரணமாகிவிட்டன. சிறுவர்களுக்குக் கூட நெஞ்சுவலி ஏற்படும் அவல நிலை.
குடும்பத்தில், பணியில், சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மனிதன் திண்டாடுகின்றான். இவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க முடியாமல் தவிக்கின்றான்.
ஏன் இந்த நிலை?
நமது உணவுப் பழக்கமும், வாழ்க்கைத் தடமும் மாறிப் போய்விட்டன. எங்கும் அவசரம்! எதிலும் அவசரம்!
இதனை மாற்றுவது எப்படி? இந்த அவசர உலகுக்கு ஈடு கொடுப்பது எப்படி?
உங்கள் குடும்பத்தாரின் உடல் நலம் உங்கள் கையிலா? மருத்துவரின் கையிலா?
ஆரோக்கியமான அழகிய குடும்பம் அமைத்திட…
இன்பமயமான இஸ்லாமிய குடும்பம் என்ற கனவு நனவாகிட…
இதோ ஓர் அரிய வாய்ப்பு!
ஆரோக்கியமான இஸ்லாமிய வாழ்வு குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்காக வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 3 மணிக்கு ‘ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்’ என்ற நிகழ்ச்சியினை ஷார்ஜா அல்-ரயான் ஸ்டார் இண்டர்நேசனல் ஸ்கூலில் Emirates India Fraternity Forum (EIFF) நடத்துகிறது. இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் அமீரகவாழ் குடும்பங்களும், தனிநபர்களும் திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. வாகன வசதி மற்றும் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு என்று தனியாக விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் 055 9753530 என்ற அலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment