தமிழ் நாடு கட்டாய திருமணப் பதிவும், கடவுச் சீட்டு விதிமுறைகளும். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, April 16

தமிழ் நாடு கட்டாய திருமணப் பதிவும், கடவுச் சீட்டு விதிமுறைகளும்.

தமிழ் நாடு கட்டாய திருமணப் பதிவும், கடவுச் சீட்டு விதிமுறைகளும்.

புதிதாக திருமணம் செய்து கொண்டுள்ளவர்களும் செய்யப் போகிறவர்களும்

திருமண வைபங்களை எவ்வளவு சிறப்பாக செய்தீர்கள்? அல்லது செய்ய உத்தேசித்துள்ளீர்கள்? என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மனதில் நிற்கும் நிகழ்வு. நாம் வழக்கமாக திருமணம் என்றால் ஏற்பாடு செய்யவேண்டிய உடுப்புகள், வீட்டு பராமரிப்பு, அழைப்புக்கள் விருந்து மற்றும் நிக்காஹ் செய்யும் முறை ஆகியவற்றில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கும், கொள்கைக்கும் தக்கவாறு தற்போது மாறுபட்டாலும் அரசாங்க ஆணை மற்றும் நடைமுறையை பின்பற்றுவதில் ஒன்று பட்டுத்தான் போகிறோம். கூப்பன் முதல் பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ் மற்றும் கடவுச் சீட்டு

ஆகியவற்றிக்கு அரசு அலுவலங்களில் நமது அசொளரியங்களை சகித்துதான் செயல்படுகிறோம் என்பதை மறுக்க இயலாது.

நம்முடைய அதிரை வாழ் சமூகம் வெளி நாட்டு உழைப்பை நம்பித்தான் இருந்து வருகிறது இந்த சார்பு எத்தனை காலத்துக்கு துனை போகும். நம் இளையவர்கள் பகுத்தறிந்து செயல்படவேண்டிய கால கட்டம் இது.

படிப்பு முடிந்ததும் வேலை, தொழில் அனுபவம், சுய சார்பு பிறகு திருமணம் என்பது பிற சமூக நடைமுறை ஆனால் நம் மக்களுக்கு குறைந்த படிப்பும், திருமணமும், பாஸ்போர்டும், வெளி நாட்டு விசாவும், பல வருட வெளி நாட்டு உழைப்பும் அதனுடன் பெற்ற நோய்களுமாய் ஊர் வருவதுதான் மரபு. பல சந்ததிகளை கடந்தும் இதே நிலைமை தொடரத்தான் செய்கிறது. இளையவர்களுக்கு ரோல் மாடல்களான அவர்கள் கானும் மூத்தவர்கள் செய்ததை வழமையாக இவர்களும் தொடர்கிறார்கள் என்ன? முன்பு டிகிரி படித்து கல்வியை நிறைவு செய்தார்கள் இப்போது மாஸ்டர் டிகிரி, பொறியாளர் பட்டயப் படிப்பு படித்தாலும், வெளி நாட்டு வேலைதான் வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை.

கட்டாய திருமண பதிவு சட்டத்திற்கான அரசு சொல்லும் காரணம்.

நம்முடைய சமூக திருமணங்கள் மார்கப்படி நடைபெற்று ஊர் வழக்கபடி முஹல்லாவில் உள்ள சங்க ஏடுகளில் பதிய பெற்று நடந்து வந்துள்ளது நம்முடய சங்கத்தின் திருமணச் சான்றிதழ்களை அரசு அலுவலகங்கலில் ஏற்றுக் கொள்ள பட்டன ஆனால் தற்போதய நிலைமை வேறு. உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.

http://www.tn.gov.in/stationeryprinting/extraordinary/2010/259-Ex-III-1a.pdf

திருமண பதிவு சட்டத்தை அனைத்து சமயத்தவரும் ஏற்று செயல்படுத்தும் படி அறிவுத்துகிறது.

மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009 சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். எங்கே பதிவு செய்வது? உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய். 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.

திருமணத்தை பதிவு செய்வதற்கு தனியே படிவங்கள் இருக்கின்றன. இந்தப் படிவம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கும். இணையத்தில் கூட கிடைக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய்து, கூடவே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து, சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தாக்கல் செய்யவேண்டும். படிவத்தில் கணவன், மனைவி இருவரது புகைப்படங்களையும் ஒட்ட வேண்டும். கூடவே தம்பதியின் மற்றொரு புகைப்படத்தையும் இணைக்கவேண்டும். மேலும், தம்பதியின் வீட்டு விலாசத்துக்கான அத்தாட்சி, அடையாள அத்தாட்சி (Identity Proof) ஆகியவற்றின் நகல்களையும் வைக்கவேண்டும். திருமண அழைப்பிதழையும் உடன் இணைக்கவேண்டும். திருமணத்தை நடத்தி வைத்த மத குருமார் (காஜி/இமாம்) மனுவில் கையொப்பம் இட வேண்டும் மஹர், மண பெண்ணின் பொருப்பாளர் விபரமும் குறிப்பிட வேண்டும் மணபெண்ணுக்கு 18 வயதும். மண மகனுக்கு 21 வயதும் நிரம்பி இருக்க வேண்டும். மதகுருமாரைத் தவிர, வேறு இரு நபர்களும் மனுவில் சாட்சி கையெழுத்து போடவேண்டும். மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில்லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. பயந்து விடாதீர்கள். தண்டனை 1000 ரூபாய் அபராதம். இப்படி பதிவு செய்த திருமண சான்றிதழை வைத்து தான் தான் அரசு அலுவலங்கள் மற்றும் அரசாங்க சட்டத்தை ஏற்று நடத்தும் அமைப்புகள் தம்முடைய மற்றய தொடர்பு பதிவுகளை செய்வதற்கு சான்றாக இதை தாக்கல் செய்ய கோருகிறார்கள், இந்த சான்றிதழ் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது என்பது தற்போதய நிதர்சனமான உண்மை.

இப்போது பாஸ்போர்ட் பெற இணையதள வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்காக உள்ள இணையதள முகவரியில் பதிவு செய்யும்போது, விண்ணப்பங்களுடன் நேரில் ஒரு நாள் வரச் சொல்லி ஆவணங்கள் சரிபார்க்கப்படும். https://passport.gov.in/trichy.html

திருமணம் முடிந்து உடன் பதிவை செய்யாமல் வெளி நாட்டுக்கு போய்விட்டால் எப்பாடு பட்டாலும் உங்கள் அல்லது மனைவியின் கடவு சீட்டில் கனவன் / மனைவி பெயர் குறிப்பிடுவதற்கு இந்த சான்றிதழ் இல்லாமல் டாட்டாவின் (PSK) அலுவலகத்தில் எதுவும் செய்ய இயலாது.

தவனை காலம் முடிந்தால் 1954 சிறப்பு திருமண பதிவு சட்டப்படி 30 நாட்கள் ஊரில் தங்கி இருந்து சான்றிதழ் பெரும் நிலைக்கு தள்ள பட்டு அதன் சட்ட வரம்புக்கு உட்படுவீர்கள்.


நன்றி: அதிரை இன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here