முத்துப்பேட்டையில் காஸ் சிலிண்டர் விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 29

முத்துப்பேட்டையில் காஸ் சிலிண்டர் விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

ஏப்ரல் 29: முத்துபேட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து நிகழ்ந்த விபத்தில்
இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆனது.
முத்துபேட்டை கோசாகுளத் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். நகைக்கடை உரிமையாளரான இவரது வீட்டில் நிகழ்ந்த விபத்தில் அவரது தாய் வசந்தா (55) மனைவி பிரபாவதி, மகள் பிரகதி (17) பக்கத்து வீட்டைச் சேர்ந்த நடராஜன் மனைவி வசந்தா (32), அவரது மகள்கள் காவ்யதர்சினி (11) காவ்யாஞ்சலி (4) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் 6 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் அன்பழகனின் தாய் வசந்தா, மகள் பிரகதி ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தனர். இந்நிலையில், காவ்யதர்சினி சனிக்கிழமை காலை இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை தொடர்கிறது.
விபத்து குறித்து முத்துபேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here