மார்ச் 25: தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் (23.03.2012)வெளியீட்டு இருக்கும் செய்திக்குறிப்பானது, ”முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 18 வார்டுகளில் உள்ள தெருக்களில் குடிநீர் கசிவு ஏற்பட்டு சாக்கடை நீர் அடைப்பால் குடிநீர் மாசுபடுகிறது. எனவே குடிநீர் இணைப்புதாரர்கள் வீட்டு குடிநீர் பைப் லைனை தாங்கள் சொந்த செலவில் செயல் அலுவலர் பேரூராட்சியால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த குடிநீர் பணியாளர் மூலம் சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி பணி வேறு பணியாளர்கள் மூலம் சரி செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. குடிநீரை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும், பேரூராட்சிக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது”.
மற்றும் குடிநீர் வரி, சொத்து வரி, வீட்டு வரி ஆகிய அனைத்தையும் இந்த மாதம் 28 ம் தேதிக்குள் செலுத்திவிடுமாறும் பொது மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம். மீறினால் தக்க நடவடிக்கை பேரூராட்சி சார்பாக எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
இங்ஙணம்
செயல் அலுவலர்
தேர்வு நிலை பேரூராட்சி – முத்துப்பேட்டை
நன்றி : முத்துப்பேட்டை.org

No comments:
Post a Comment