சென்னையில் மோனோ ரெயில் திட்டம் பணிகள் தொடக்கம் விரைவில்.. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 24

சென்னையில் மோனோ ரெயில் திட்டம் பணிகள் தொடக்கம் விரைவில்..


மார்ச். 24: சென்னையில் தற்போது மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும், வாகன பெருக்கத்திற்கு ஏற்பவும் 'மோனா ரெயில்' திட்டம் தேவை என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 16,650 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நான்கு வழித்தடங்களில் அமைக்கப்படும் இந்த மோனோ ரெயில் திட்டத்தின் மொத்த தூரம் மொத்தம் 111 கி.மீ ஆகும். இத்திட்டத்தை முதற்கட்டமாக வண்டலூர்-தாம்பரம்- குரோம்பேட்டை-குன்றத்தூர்- ஆவடி- புழல் (54 கி.மீ.) வரை முதல் வழித்தடம், வண்டலூர்- தாம்பரம் கிழக்கு- வேளச்சேரி (23 கி.மீ.) வரை இரண்டாவது வழித்தடம், பூந்தமல்லி - வளசரவாக்கம்- வடபழனி (16 கி.மீ.) வரை மூன்றாவது வழித்தடம், பூந்தமல்லி- போரூர்-கத்திப்பாரா (18 கி.மீ.) வரை நான்காவது வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது.
வண்டலூர்- புழல் (54 கி.மீ.) வரையில் அமைக்கப்பட உள்ள பாதை, உலகிலேயே மிக நீண்ட 'மோனோ ரெயில்' பாதையாக இருக்கும். இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டது. 8 சர்வதேச நிறுவனங்கள் இந்த டெண்டர்களை கோரியுள்ளன. 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு தகுதியான நிறுவனங்களை விரைவில் தேர்வு செய்ய இருக்கிறது. சென்னையில் மக்கள் தொகை தற்போது 90 லட்சத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை தாண்டி விட்டது. வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்க்காகவும் இந்த மோனோ ரெயில் திட்டம் சென்னையில் கொண்டுவரப்பட இருக்கிறது.
சென்னைக்கு அடுத்து மதுரை, கோவை, திருச்சி ஆகிய பெருநகரங்களிலும் மோனோ ரெயில் திட்டம் கொண்டுவரலாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலாட தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்திருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here