மார்ச். 26: திருவாரூர் to பட்டுக்கோட்டை வழி முத்துப்பேட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதையினை அகல ரயில் பாதையாக மாற்றக்கோரியும் அதற்கான பணியினை துரிதப்படுத்த அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டியும் முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் 18.3.12 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் கொய்யா மஹாலில் நடைபெற்றது, அந்தக்கூட்டத்தில் அரசியல் சாராத போராட்டக்குழுவும் அமைக்கப்பட்டது என்ற செய்தியினை நாம் அறிவோம்.
அந்த போராட்டக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் S.S பாக்கர் அலி சாஹிப் அவர்கள் தலைமையில், 25.3.12 (ஞாயிற்றுக்கிழமை) அஸர் தொழுகைக்குப்பின் முஹைதீன் பள்ளி மதரஸா வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. அடுத்த மாதம் ஏப்ரல் 10 ம் தேதி செவ்வாய்கிழமையன்று மாபெரும் ரயில் போராட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.
2. ரயில் மறியல் போராட்டத்தின் தலைமையினை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் அவர்கள் ஏற்க உள்ளார்கள்.
3. இந்த போராட்டத்தில் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. உலகநாதன் அவர்களும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப். அப்துல் ரஹ்மான் அவர்களும் கலந்துக்கொள்ள உள்ளார்கள்.
4. போராட்டத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அனைவரும் ஒத்துழைப்புடன் செய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி: முத்துப்பேட்டை. org

No comments:
Post a Comment