ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி அணி - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, February 27

ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி அணி

பிப்.26: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பிரதான சுற்றில் விளையாடத் தகுதிபெற்றது இந்திய ஆடவர் அணி.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தகுதிச்சுற்றின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது.
இந்திய வீரர் சந்தீப் சிங், இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் உள்பட மொத்தம் 5 கோல்களை அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். இதனால் 3-வது நிமிடத்திலேயே இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் சந்தீப் சிங் கோலடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஏமாற்றத்தில் முடிந்தது. ஆட்டத்தின் முதல் கோல் 17-வது நிமிடத்தில் விழுந்தது. இந்திய கேப்டன் லகரா, ரிவர்ஸ் ஷார்ட் மூலம் அற்புதமாகக் கோலடித்தார்.
அதன்பிறகு ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. 19, 26, 38-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்தார் சந்தீப் சிங். 43-வது நிமிடத்தில் இந்தியாவின் சுனில் கோல் அடித்தார். 49-வது நிமிடத்தில் தனது 4-வது கோலை அடித்த சந்தீப், 51-வது நிமிடத்தில் தனது 5 கோலை அடித்தார்.
56-வது நிமிடத்தில் ரகுநாத் கோல் அடிக்க, இறுதியில் இந்தியா 8-1 என்ற கணக்கில் பிரான்ûஸ வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறியது. பிரான்ஸ் தரப்பில் மார்டின் பிரிசாக் மட்டுமே (24-வது நிமிடத்தில்) கோல் அடித்தார்.
போலந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 9 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் 6-ஐ வீணடித்த இந்தியா, பிரான்ஸýக்கு எதிரான ஆட்டத்தில் 7 பெனால்டிகார்னர் வாய்ப்புகளில் 6-ஐ கோலாக மாற்றியது. அதில் 5 கோல்கள் சந்தீப் சிங்கால் அடிக்கப்பட்டவை. அதேநேரத்தில் பிரான்ஸ் அணிக்கும் 7 பெனால்டிகார்னர் வாய்ப்புகள் கிடைத்தாலும், அவர்கள் ஒன்றை மட்டுமே கோலாக்கினர். மற்றவற்றை கோட்டைவிட்டனர். இந்திய வீரர்களின் தொடர்ச்சியாக அதிரடி ஷார்ட்களை எதிர்கொள்ள முடியாமல் பிரான்ஸ் வீரர்கள் ஆட்டம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
80 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் கடந்த முறை பிரதான சுற்றுக்கு முன்னேறுவதில் தோல்வி கண்ட இந்தியா, இந்த முறை அனைத்து ஆட்டங்களிலும் அபாரமாக ஆடி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 8 முறை தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனடாவுக்கு வெண்கலம்: 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கனடா 4-3 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
ஒரு கோலுக்கு ரூ.5 லட்சம்: ஒலிம்பிக் பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, பெரும் பரிசுத்தொகையையும் அறிவித்துள்ளார் ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா.
அதன்படி ஹரியாணா வீரர்களுக்கு இறுதி ஆட்டத்தில் அடித்த ஒவ்வொரு கோலுக்கும் ரூ. 5 லட்சமும், மற்ற ஆட்டங்களில் அடித்த கோல் ஒன்றுக்கு ரூ. 1 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி அணியில் இடம்பெற்றிருந்த ஹரியாணா வீரர்களுக்கு கூடுதலாக தலா ரூ.11 லட்சமும், மற்ற மாநில வீரர்களுக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதேபோல் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், அணியின் அதிகாரிகளுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா மற்றும் லலித் ஹோட்டல் குழுமம் அறிவித்துள்ளது.
தொடர் நாயகன் சந்தீப் சிங்
இந்தத் தொடரில் 6 ஆட்டங்களில் விளையாடிய சந்தீப் சிங் மொத்தம் 16 கோல்களை அடித்து தொடர்நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். அது மட்டுமின்றி இரண்டு முறை ஹாட்ரிக் கோலும் அடித்தார். பிரான்ஸýக்கு எதிரான லீக் ஆட்டத்திலும், இறுதி ஆட்டத்திலும் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார். இதன்மூலம் உலகின் தலைசிறந்த பெனால்டி கார்னர் வீரர்களில் தானும் ஒருவர் என்பதை சந்தீப் சிங் நிரூபித்துவிட்டார்.
ரூ. 49 லட்சம்
ஹரியாணா வீரரான சந்தீப் சிங், இறுதி ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்ததன் மூலம் ரூ. 25 லட்சம், மற்ற ஆட்டங்களில் அடிக்கப்பட்ட 11 கோலுக்கு ரூ. 11 லட்சம், ஹரியாணா வீரருக்கு வழங்கப்படும் ரூ. 11 லட்சம், ஹாக்கி இந்தியா சார்பில் 2 லட்சம் என மொத்தம் 49 லட்சம் பரிசுத்தொகையைத் தட்டிச் சென்றுவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here