பிப். 27- இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 4 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
நேற்று நடந்த 10-வது 'லீக்' ஆட்டத்தில் இந்திய அணி 83 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த தோல்வி மூலம் இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போனது.
நேற்றைய ஆட்டத்திலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் எளிதில் சரண்டர் ஆனது. 253 ரன் இலக்கை எடுக்க முடியாமல் இந்தியா 165 ரன்னில் சுருண்டது மிகவும் பரிதாபமே. பேட்ஸ் மேன்கள் ஒட்டு மொத்தமாக மோசமாக விளையாடி வருவதால் இந்திய அணி படுபாதாள நிலையில் உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் 87 ரன்னில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா 19 புள்ளிகளை பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி கடைசி 'லீக்' ஆட்டத்தில் இலங்கையை நாளை சந்திக்கிறது.
இந்திய அணி 7 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. நாளைய ஆட்டத்தில் இந்திய அணி போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் இருக்க முடியும்.
அதே நேரத்தில் இலங்கை அணி கடைசி 'லீக்' ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்க வேண்டும். இந்திய அணி போனஸ் புள்ளி இல்லாமல் வெற்றி பெற்றால் வாய்ப்பை இழந்துவிடும். இதற்கான சாத்திய கூறுகள் குறைவானது என்பதால் இந்திய அணி இந்தப் போட்டியில் இருந்து வெளியேறிவிடும் எனத் தெரிகிறது.
இந்தப்போட்டி தொடரில் இந்திய அணி இலங்கையை ஒருமுறை வென்றது. மற்றொரு முறை தோற்றது. இன்னொரு முறை 'டை' செய்தது. ஆஸ்திரேலியாவிடம் 3முறை தோற்றது. இந்தப்போட்டித் தொடரில் இந்திய வீரர்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஷேவாக், தெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா ஆகியோரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. நேற்றைய மிகவும் முக்கியமான ஆட்டத்தில் கூட பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது.
இலங்கை அணி கடந்த 3 ஆட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதனால் நாளைய ஆட்டத்திலும் வென்று அந்த அணி இறுதிப் போட்டி வாய்ப்பை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment