
பிப், 29- தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். வாடகை ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டதால், எண்ணை நிறுவனங்கள் புதிய வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றி லாரி வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஏற்கனவே ஓடும் கியாஸ் டேங்கர் லாரியுடன் கூடுதலாக 600 டேங்கர் லாரிகளையும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடக்கிறது.
இதனால் இந்த சங்கத்தில் இணைந்து உள்ள 3600 கியாஸ் டேங்கர் லாரிகள் இன்று நள்ளிரவு முதல் ஓடாது. இதுகுறித்து தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறியதாவது:-
வாடகையை உயர்த்தி வழங்குதல், கூடுதலாக டேங்கர் லாரிகளை இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை இது வரை எண்ணை நிறுவனங்கள் நிறைவேற்றவில்லை. எனவே இன்று நள்ளிரவு 12 மணி முதல் கியா£ஸ் டேங்கல் லாரிகள் ஓடாது. எங்கள் கோரிக்கைகளை எண்ணை நிறுவனங்கள் நிறைவேற்றும் வரை இந்தப்போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்க செயலாளர் கார்த்திக் கூறியதாவது:-
தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா உள்பட தென் மாநிலங்களில் 52 கியாஸ் பிளாண்டுகள் உள்ளன. இந்த பிளாண்டுகளுக்கு எங்கள் சங்கத்தில் உள்ள 3600 டேங்கர் லாரிகள் இன்று நள்ளிரவு முதல் கியாஸ் ஏற்றிச்செல்லாது. இன்று நள்ளிரவு முதல் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்படும். வேலை நிறுத்த்ததால் எங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டரை கோடி வீதம் நஷ்டம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதம் (ஜனவரி) 12-ந்தேதி முதல் 4 நாட்கள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கியாஸ் டேங்கார் லாரி அதிபர்கள் வேலை நிறுத்த்ததில் ஈடுபட்டனர்.
அப்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், ஆகிய மூன்று எண்ணை நிறுவனங்களும் டேங்கார் லாரி உரிமையாளர்களின் கேரிக்கைகளை பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்து இருந்தன. ஆனால் இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வேலைநிறுத்த்த்தில் ஈடுபடுகின்றனர்.
ஏற்கனவே கியாஸ் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் கியாஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்.

No comments:
Post a Comment