பிப். 23-
அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் ரெயில்நிலையத்தில் நேற்று பயணிகள் ரெயில் ஒன்று ரெயில்நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தின் கடைசிப்பகுதியில் உள்ள தடுப்புப்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் 49 பேர் பலியானார்கள் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் காவல் துறை ஆணையர் நெஸ்டார் ரோட்ரிகுயிஸ் தெரிவித்தார்.
இந்த விபத்தினால் பல ரயில்பெட்டிகள் சேதமடைந்தன. காயமடைந்த வர்களை ஹெலிகாப்டர்களிலும் ஆம்புலன்சுகளிலும் மீட்புப்படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட ரெயில் விபத்துகளில் மோசமான ரெயில் விபத்து இதுதான் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த 1970-ம் ஆண்டு பிப்.1-ம் தேதி இதே ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதியதில் 200 பேர் பலியாகினர். பின்னர், கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி ஏற்பட்ட ரெயில் விபத்தில் 11 பேர் பலியாயினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த இந்த ரெயில் மணிக்கு 26 கி.மீ. வேகத்தில் வந்து தடுப்புப்பகுதியில் மோதி இருப்பதாக அர்ஜென்டினா நாட்டின் போக்குவரத்து செயலாளர் ஜே.பி. ஸ்கியாவி ரெயில் நிலையத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment