ஆசிய கோப்பை கிரிக்கெட் 2012 - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, February 24

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2012



இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் 3 நாடுகள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி வங்காள தேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு வருகிற 1-ந்தேதி மும்பையில் நடக்கிறது. 3 நாடுகள் போட்டியில் இந்திய அணி ஆட்டம் சிறப் பாக இல்லை என்பதால் பல வீரர்கள் கழற்றி விடப்படலாம். சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடியில் தேர்வு குழுவினர் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here