சென்னையில் 2 மணிநேரம் மின்தடை (பிப்ரவரி 27) அமல் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 25

சென்னையில் 2 மணிநேரம் மின்தடை (பிப்ரவரி 27) அமல்



பிப். 25- வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 27 ) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடை அமலுக்கு வருகிறது. கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக சென்னை தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் கடந்த ஆண்டின் துவகத்திலிருந்தே மின்தடை நிலவி வருகிறது.


ஆரம்பத்தில் அங்கு 2 மணி நேரமாக இருந்த மின்தடை  படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நிலவுகிறது. கிராமப்புறங்களின் இத்தகைய மின்தடை நேரத்தை குறைக்க, சென்னையிலும் மின்தடை அமலுக்கு வருவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிப். 27 முதல் தினமும் 2 மணி நேரம் மின் தடையும்,  மார்ச் 1 முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் மின் விடுமுறையும் அமலுக்கு வருகின்றன. இதனால் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிப். 27 முதல் மின்தடை நேரம் தினமும் 4 மணி நேரமாக குறையும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here