முத்துப்பேட்டை அருகே நடந்த கார் விபத்தில் 4குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். - BBC

BBC

BBC+LOGO+011

Post Top Ad

Wednesday, May 11

demo-image

முத்துப்பேட்டை அருகே நடந்த கார் விபத்தில் 4குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

Responsive Ads Here
car-accident

மே 11: முத்துப்பேட்டை அருகே நடந்த கார் விபத்தில் 4குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். புதுக்கோட்டை அருகேயுள்ள வாச்சிக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்தாஸ். இவரது குடும்பத்தினர் கடந்த 8ம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு காரில் முத்துப்பேட்டை வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர் காரை டிரைவர் தளபதி என்பவர் ஓட்டினார். பின்னத்தூர் காத்தவராயன் கோயில் அருகே கார் வந்தபோது காரின் பின்பக்க டயர் வெடித்தது. 

இதில் நிலை தடுமாறிய கார் சாலையோரம் இருந்த  வீட்டுக்குள் புகுந்தது. இதில் காரில் இருந்த செல்சியாமாலினி(16)க்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் ஜெகதீஸ்வரி(12), விமலரோசினி(10), ஜெகதீசன்(8), ஆகியோரும் படுகாயமடைந்தனர். அப்பகுதியினர் அனைவரையும் மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எடையூர் எஸ்ஐ திராவிடமணி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad