பிப்ரவரி 08: முத்துப் பேட்டை செக்கடிக் குளத்தின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முற்றுகை போராட்டத்தால் நிறுத்தப் பட்டது.
முத்துப்பேட்டை செக்கடிக் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 04-02-2016 துவங்கியது. இதில் பள்ளி வாசல் மற்றும் தனியார் பெண்கள் சுற்றுச் சுவர் உட்பட 20க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப் பட்டது. இந் நிலையில் 05-02-2016 காலை 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.
இதில் அங்குள்ள தனியார் பெண்கள் பள்ளியின் சுற்றுச் சுவரின் சில பகுதிகளை இடித்து அகற்றி விட்டு பள்ளி முன்புள்ள பாலத்தை உடைக்க முயன்றனர். அப்போது பள்ளி ஆசிரியைகள் மற்றும் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கல்யாணசுந்தரம், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் செந்தில், கீழக்காடு ஊராட்சி தலைவர் மணி கண்டன், மமக மாவட்ட செயலாளர் தீன் முகம்மது மற்றும் பலர் திரண்டு வந்து பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டனர்.
டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக்டர் (பொ) முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பாலத்தை அகற்ற கூடாதென பொது மக்கள் வலியுறுத்தினர். அதே போல் குளத்தின் தென் கரையில் உள்ள வீடுகளை இடிக்கும் போதும் எதிர்ப்புகள் கிழம்பியது. அதனால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப் பட்டது.
இது குறித்து தாசில் தார் பழனிவேல் கூறுகையில், தனியார் பள்ளியின் பாலம் கண்டிப்பாக அகற்றப்படும் என்றார். பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன் கூறுகையில், மேல் இடத்தின் உத்தரவுபடி பணியை நிறுத்தியுள்ளோம். வேறொரு தேதியில் அகற்றும் பணி நடைபெறும் என்றார்.
இது குறித்து வீடுகளை இழந்த பொது மக்கள் கூறுகையில், எங்களது வீடுகளையும் பள்ளிவாசல் சுற்றுச் சுவரையும் அகற்றும் போது எந்த ஒரு முக்கிய பிரமுகர்களும் வந்து தட்டி கேட்கவில்லை. வசதி படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது மட்டும் வந்து போராடுகின்றனர். ஏழை களுக்கு ஒரு நியாயம், பணக்காரர்களுக்கு ஒரு நியாயமா. நீதி மன்றம் உத்தரவுப் படி அந்த ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டு வீடுகளை இழந்த மக்கள் அப் பகுதி சாலையோரத்தில் சமையல் செய்யும் பணியில் ஈடு பட்டனர்.
No comments:
Post a Comment