பிப்ரவரி 09: ரஹ்மத் பெண்கள்மேல் நிலைப்பள்ளி நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு நடந்து இருப்பதாக கூறி பள்ளியின் தடுப்பு சுவர் மற்றும் பள்ளியின் நுழைவாயில் அகற்றப்பட்டது. சுற்றுச் சுவரின் சில பகுதிகளை இடித்து அகற்றி விட்டு பள்ளி முன்புள்ள பாலத்தை உடைக்க முயன்றனர். அப்போது பள்ளி ஆசிரியைகள் மற்றும் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கல்யாணசுந்தரம், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் செந்தில், கீழக்காடு ஊராட்சி தலைவர் மணி கண்டன், மமக மாவட்ட செயலாளர் தீன் முகம்மது மற்றும் பலர் திரண்டு வந்து பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
இதனால் பள்ளியில் படிக்கும் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மேலும் பள்ளிக்கு செல்லும் பாலம் உடைக்கப்பட்டால் பள்ளி மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகிவிடும். இன்று மதியம் 3 மணியளவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரூராட்சி துணைத் தலைவர், M.அப்துல் வஹாப், கிளார்க் 2 அவர்களிடம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்காக பாதையில் உள்ள பாலத்தை அகற்றாமல் இருக்க கேட்டு மனு கொடுத்தனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது முத்துப்பேட்டை.
No comments:
Post a Comment