பிப்ரவரி 08: நீர் நிலைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வீடு, பள்ளிவாசல், மற்றும் பள்ளிகூடங்களை உடைத்து போடுவதும் பின்பு நீர் நிலைகளை சரிசெய்யாமல் குப்பை மேடாக போட்டு அடுத்தவர்களை ஆக்கிரமிக்க தூண்டுவதும் ( உதாரனம் பட்டரை குளம் ) முத்துப்பேட்டையில் நடந்துவருகிறது
தமிழகத்தின் சிறந்த பள்ளிகூடங்களில் ஒன்றான ரஹ்மத் பள்ளிகூடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறி உடைத்து நொருக்கி சேதப்படுத்தியது பெரிய அநியாயம்.
அதோடு நிறுத்தாமல் கீழே தண்ணீர்போக வழிவிட்டு அமைத்துள்ள பாலத்தை வலுக்கட்டாயமாக இடிக்க முயலுவது தமிழ்நாட்டில் எங்குமே நடக்காத அராஜகம்.
ரஹ்மத் பள்ளிகூட நிர்வாகத்தை ஏதோ சில காரணங்களுக்காக பிடிக்கவில்லை என்பதற்காக இந்த இடிப்பை பார்த்து சந்தோஷப்படுபவர்கள் சிந்திக்க வேண்டும்..
இதுபோல தொடர்ந்து நடந்தால் முத்துப்பேட்டையில் முதலீடு செய்து பள்ளிகூடமோ, ஹாஸ்பிட்டலோ, காலேஜோ தொடங்க யாரும் முன்வரமாட்டார்கள்..
ரஹ்மத் பள்ளிகூட பாதையான பாலத்தை இடித்து அதில் படிக்கும் பிள்ளைகளுக்கு இடையூறு செய்வதை எதிர்த்தும், மக்கள் தங்கள் வீடுகளுக்கு போக முடியாமல் போக்குவரத்து பாலங்களை இடித்தும், இடையூறு செய்வதை கண்டித்து மனிதாபிமான நடவடிக்கையில் தவ்ஹித்ஜமாத் இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் பல காலேஜ்கள் தொலைக்காட்சி நிலையங்கள் நீர் நிலைகளுக்கு உள்ளேயே கட்டப்பட்டு உள்ளது. அதற்கெல்லாம் வலைந்து கொடுக்கும் அரசு ஒரு சிறிய பாலத்தை இடிக்க இத்தனை ஆர்வம் காட்டுவது கண்டிக்கதக்கது.
ரஹ்மத் பள்ளிகூடம் மற்றும் அதை சுற்றி குடியிருக்கும் மக்களுக்கு முறையான பாலம் அமைத்து கொடுத்து அரசு இதை சரிசெய்ய வேண்டும். வீடு இடிபட்ட மக்களுக்கு மாற்றிடம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து எடுத்து வைக்கப்பட்டது
எழுத்து பூர்வமாக மனுவும் கொடுக்கப்பட்டது.
மிகவும் கவனமுடன் கேட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்கள்..
அடுத்தவர்களின் கஷ்டத்தில் சந்தோஷப்படுவதை தவிர்க்கவேண்டும்
நாளை அது நமக்கே வரலாம்.
முத்துப்பேட்டை கட்டிநாநா.
தகவல்: முத்துப்பேட்டை மீடியா
No comments:
Post a Comment