ஜனவரி 12: தபால் நிலையத்தின் ஜெனரேட்டர், இன்வேட்டர் பழுதடைந்துள்ளதால் அவதிப்படும் பொது மக்கள்.
முத்துப்பேட்டை சித்தேரி குளம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது. முத்துப்பேட்டை சுற்றி உள்ள தம்பிக்கோட்டை, கீழக்காடு, கோவிலூர், ஆலங்காடு, உப்பூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடைக்கிய தபால் நிலையமாக செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு சேமிப்பு உறுப்பினர்களும், சுமார் 2 ஆயிரத்துக்குள் சேமிப்பு கணக்கு உள்ள உறுப்பினர்களும் உள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த தபால் நிலையத்தில் அதிகளவில் ரயில் டிக்கெட் முன்பதிவு, மின் கட்டணம் செலுத்துதல், மேலும் ரிஜிஸ்டர், மணி ஆடர் என எந்த நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும் ஒரு தபால் நிலையமாக செயல்படுகிறது.
இந்த தபால் நிலையத்தில் பயன்பட்டு வந்த ஜெனரேட்டர் சுமார் 2 வருடங்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனை பொதுமக்கள் சீரமைத்து தர வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். எந்த பலனும் இல்லை. அதன் பிறகு சென்ற ஆண்டு தபால் நிலையம் இடம் மாற்றம் செய்தபோது இந்த தபால் நிலையத்தில் இன்வேட்டர் பொறுத்தப்பட்டது. அதுவும் பல மாதங்களுக்கு முன்பு பழுந்தடைந்துவிட்டது. இதனால் மின் தடை ஏற்படும் நேரத்தில் மேற்கண்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாமல் பணியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். பொதுமக்களும் தங்களவு அஞ்சல் மற்றும் பல்வேறு சேவைகளை பெறமுடியாமல் அலக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் சார்பில் பல முறை உயர் தலைமை அதிகாரிகளுக்கு பழுதடைந்த ஜெனரேட்டரையும், இன்வேட்டரையும் பழுது நீக்கி சரி செய்து தரும்படி கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர்.
மேலும் முத்துப்பேட்டையில் உள்ள ரயில்வே பணி நடைபெறுவதால் அங்குள்ள ரயில்வே முன்பதிவு டிக்கெட் அலுவலகம் மூடப்பட்டதால் பொதுமக்கள் இந்த தபால் நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது ஏற்படும் மின்தடையால் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதில் தக்கலின் முன்பதிவு செய்ய முற்றிலும் தடை ஏற்படுகிறது. இப்பேர்பட்ட சூழ்நிலையில் மின்தடை நேரத்தில் முத்துப்பேட்டை தபால் நிலையம் பணிபுரியும் நேரத்தில் இருண்ட நிலையிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெரிச்சோடியும் தற்பொழுது காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு மின்சார வாரியம் மாந்தாந்திர பராமரிப்புக்காக காலை முதல் மாலை வரையை ஏற்படுத்தியது. இதனால் அலுவலகத்தில் எந்த பணியும் நடைபெறாததால் ஊழியர்கள் கடமைக்காக வந்துவிட்டு சென்றனர். இது குறித்து பொதுமக்கள் சார்பில் செல்வநாதன் கூறுகையில்: முத்துப்பேட்டை தபால் நிலையம் அதிக மக்கள் தொடர்புக் கொண்ட ஒரு தபால் நிலையமாகும். தற்பொழுது ஜெனரேட்டர் மற்றும் இன்வேட்டர் பழுதடைந்ததால் மின் தடை நேரத்தில் ஏற்படும் சிரமங்கள் ஏராளம். அதே போல் அடிக்கடி மின் தடை ஏற்படும் போது அலுவலகத்தில் இயங்கும் கணினிகள் பழுதடைவது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் செய்யும் பணியும் பாதியில் முடங்கி அழிந்துவிடுகிறது. ஆன்லைன் சேவையும் முடிங்கி உள்ளது. இதன் மூலம்; பல்வேறு சிக்கல் தபால் நிலையம் ஊழியர்களுக்கு ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த ஜெனரேட்டர் மற்றும் இன்வேட்டர்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் பழுது நீக்கி செய்து தர வேண்டும் என்றார். இது குறித்து பொதமக்கள் சிலர் கூறுகையில்: தபால் நிலையம் உயர் அதிகாரிகளின் இந்த அலட்சியத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றனர்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment