ஜனவரி 05: முத்துப்பேட்டையில் நடைபெற்ற சாலை விபத்தில் 3 வயது சிறுமி பலி. மற்றும் சாலை மறியல்.
இன்று மதியம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்கரில் உள்ள குப்பைகளை இ.சி.ஆர் சாலையில் (சரஸ்வதி வித்யாலையா பள்ளி அருகில்) கொட்டிக்கொண்டு அந்த குப்பைகளை ஏரித்து உள்ளனர். புகை கட்டுக்கடங்காமல் சாலை அனைத்தும் பரவி சாலைகளே தெரியாத அளவிற்கு மூடி விட்டது. அதே சமயம் அந்ந வழியாக வந்த மினி லாரி பேரூராட்சி டிரக்டர் மீது பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளாது. நெருப்பு புகை அதிகமாக இருந்ததால் மினி லாரி பின்னாடி வந்த இரு சக்கர வாகனம் மினி லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த இரு சக்கர வாகனத்தில் கருங்குளத்தில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த அக்கா, அக்காவின் மகள் (3 வயது) மற்றும் தம்பி ஆகியோர் பயணித்தனர். இந்த விபத்தில் மூன்று வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த அக்கா மற்றும் தம்பி முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறுமியின் உடல் போஸ்ட்மார்டம் செய்ய திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பேரூராட்சி ஊழியர்களின் அலச்சியத்தால்தான் இந்த விபத்து நடந்ததாகவும் இந்த விபத்துக்கு காரணமாக அமைந்த பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கைது செய்ய பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் முத்துப்பேட்டை பகுதி பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள
No comments:
Post a Comment