மரண அறிவிப்பு தமிழகத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போரட்ட தியாகி அமீர் ஹம்சா INA அவர்கள் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, January 4

மரண அறிவிப்பு தமிழகத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போரட்ட தியாகி அமீர் ஹம்சா INA அவர்கள்





ஜனவரி 04: மரண அறிவிப்பு தமிழகத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போரட்ட தியாகி அமீர் ஹம்சா INA அவர்கள் (03-01-2016)
பெரும் வர்த்தக குடும்பத்தில் பிறந்த  தமிழர் அமீர் ஹம்சா ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை இந்திய தாய் நாட்டை விட்டு விரட்ட தனது 21 வயதில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அக்காலத்தில் லட்சக்கணக்கில் நேதாஜிக்கு நன்கொடை வழங்கியுள்ளார் இவர் தனது இறுதி காலத்தில் கடும் வறுமையில் வாடினார். இவர் சென்னையில் காலமானார். இவரது தந்தையார் பர்மாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். நேதாஜியின் மீது மிகுந்த அன்பு கொண்டவராக விளங்கியவர் அமீர் ஹம்சா. 1943ல் பர்மாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சென்ற போது ரங்கூனில் நடைபெற்ற விழாவில் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை ஏலம் விட்டார். அப்போது அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தவர் அமீர் ஹம்சா.

ஒருமுறை இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார். 

இவரும் இவரது தந்தையாரும் நேதாஜியின் இந்திய இராணுவத்திற்காக பல லட்சக்கணக்கான ரூபாய்களை வாரி வழங்கினார்கள். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இது தொடர்பான வழக்கு லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்றது. காந்திஜி உள்ளிட்டவர்கள் இவரது விடுதலைக்காக வாதாடியதின் காரணமாக மரண தண்டனையிலிருந்து தப்பினார்.

தமிழகத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போராட்ட தியாகி "அமீர் ஹம்சா" அவர்கள் (03.01.2016) இரவு மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.

அன்னாரின் ஜனாசா இன்று (04.01.2016) அஸர் தொழுகைக்கும் பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி :
28, வீராசாமி தெரு, தங்கசாலை, (மின்ட்), சென்னை.

வீடியோ பதிவை பார்க்க (click)

https://www.facebook.com/aloor.shanavas/videos/1945050212386259/?theater

பர்மாவில் நகைக்கடை நடத்தி வந்தார் அமீர் ஹம்சாவின் தந்தை. இப்போது பாரிமுனையில் பேன்சி ஸ்டோரில் வேலை பார்க்கிறார் அமீர் ஹம்சாவின் பேரன். நாட்டுக்காக தியாகம் செய்தவரின் குடும்ப நிலை இதோ!
(2004-இல் நான் செய்த ஆவணப் பதிவு)

ஷநாவாஸ்கான் அவர்களின் பதிவு
இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் தளபதியாக விளங்கிய, விடுதலை வீரர் அமீர் ஹம்சா மறைந்தார். பர்மாவில் நகைக்கடை நடத்திவந்த அமீர் ஹம்சாவின் தந்தை, இந்திய தேசிய ராணுவத்துக்கு தம் சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்ததோடு, ராணுவத்தில் பணியாற்ற மகனையும் அனுப்பி வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் காந்தி, நேரு, ஜின்னா போன்ற தலைவர்களின் முயற்சியால் விடுவிக்கப்பட்டவர் அமீர் ஹம்சா. முஸ்லிம்களை தேசவிரோதிகளாகச் சித்தரித்து பாகிஸ்தானுக்கு விரட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு, அமீர் ஹம்சாவின் தியாகமே பதிலாக இருக்க முடியும். பாகிஸ்தான் கிரிக்கெட் டீமுக்கு இங்கே எவனாவது ஒரு முஸ்லிம் கைதட்டினால் அதை பரபரப்புச் செய்தியாக்குபவர்கள், அமீர் ஹம்சாவின் மரணத்தை பெட்டிச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை. வாழ்க இந்திய தேசியம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here