UAE-யில் பணி ஒப்பந்த அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, December 26

UAE-யில் பணி ஒப்பந்த அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும்.


டிசம்பர் 26: பணி ஒப்பந்த அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமீரக தொழிலாளர் அமைச்சக மேஜர் ஜெனரல் ஒபய்த் முஹாரி பின் சுரூர் (Obaid Muhari Bin Suroor) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு வெளிநாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் / ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை (Employment contract) அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேலை விபரங்கள், சம்பள விபரங்கள், வேலை நேரங்கள் போன்றவை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் இப்புதிய சட்டம் வரும் புத்தாண்டு 2016 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாய் மொழியில் ஒப்பந்த கடிதங்கள் வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகள், வேலை விபரங்கள், சம்பள விபரங்கள் போன்றவைகளை அறிந்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here