தினமணி நாளிதழில் நெல்மணி என்ற தலைப்பிற்கு முத்துப்பேட்டை மலிக்கா எழுதிய கவிதைகள் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, November 23

தினமணி நாளிதழில் நெல்மணி என்ற தலைப்பிற்கு முத்துப்பேட்டை மலிக்கா எழுதிய கவிதைகள்


நவம்பர் 23: தினமணி நாளிதழில் நெல்மணி என்ற தலைப்பிற்கு முத்துப்பேட்டை மலிக்கா எழுதிய கவிதைகள்..

வரண்ட நிலத்தை வாரியெடுத்து!

வளமை பொங்க வேர்வைதெளித்து!

வெயில்மழை நாளில் பதறித்துடித்து!

வயல்வரப்பே கண்ணாய் காத்து!

உடல்வலிபொறுத்து உழவுமடித்து!

உதிரமதிர உழைத்துக்களைத்து!  

வளர்த்தெடுக்கும் நெல்மணி முத்தே!

நீ,,,,,

சேற்றில் நாற்றாகி,,

செங்காற்றில் கூத்தாடி,,,

வரப்பில் விளையாடி,,

களத்தில் அடிவாங்கி,,

அரைவையில் இடிதாங்கி,,

அடுப்பில் சோறாகி,,

அகப்பையில் கைதாகி,,

அன்னமென்னும் ஆகாரமாகி    பசி தீர்க்க வந்த,

பஞ்சம் போக்க வந்த,

படைத்தோன் விளைவிக்கும்

உயர்திரு சொத்தே.....


-முத்துப்பேட்டைமலிக்கா -


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here