நவம்பர் 23: முத்துப்பேட்டையில் வீணாக கடலில் திறந்து விடப்பட்ட கோரையாறு தண்ணீர். வரண்டு போன கிளை வாய்க்கால்கள். கொதித்து போன விவசாயிகள். கதவணையை மூடிய பொதுப்பணித்துறை.
முத்துப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்தது. அதனால் ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் சென்றது. கடந்த இரு தினங்களாக மழை இல்லாததால் வெயில் அடித்தது. இந்த நிலையில் கோரையாற்றில் அதிகளவு தண்ணீர் சென்றதால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே முத்துப்பேட்டை ஆசாத் நகர் கோரையாறு தடுப்பணையில் அனைத்து பலகைகளும் திறந்து விடப்பட்டு அந்த தண்ணீர் கடலுக்கு சென்றது. இரண்டு தினங்களாக மழை இல்லாததால் திறந்து விடப்பட்ட தடுப்பனையை மூட அப்பகுதி விவசாயிகள் பொது பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை அதிகாரிகள் யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அதனால் அனைத்து தண்ணீரும் கடலில் கலந்து வீணாகி வந்தது.
இந்த நிலையில் ஆசாத் நகரிலிருந்து ஜாம்புவானோடை கிராமத்திற்கு பிரிந்து செல்லும் மொசவெல்லி வாய்க்கால் மற்றும் காலணி வாய்க்கால் இரண்டிலும் தண்ணீர் வரத்து நின்றதால் வாய்க்கால்கள் வரண்டு போனது. இதனால் அதிர்ப்தி அடைந்த இப்பகுதி விவசாயிகள் பொது பணித்துறை அதிகாரிகளிடம் ஆசாத் நகர் கோரையாற்று தடுப்பணையை மூட வழியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள் உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் மூட முடியாது என்று கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜாம்புவானோடையைச் சேர்ந்த விவசாயிகள் மாணிக்கவேல் மற்றும் நாராயணசாமி தலைமையில் ஏராளமானோர் ஆசாத் நகர் கோரையாறு தடுப்பணை அருகே கூடினர்.
பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தொடர்புக் கொண்டு உடனடியாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுக்கும் வகையில் தடுப்பணையை மூடாவிட்டால் இங்கு படுத்து போராடுவோம் என்று கூறினர். இதனையடுத்து உடனே பொதுபணித்துறை பணியாளர்கள் தடுப்பணைக்கு வந்து கதவுகளை மூடினர். இதனால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விவசாயி மாணிக்கவேல் கூறுகையில்: ஒரு வாரமாக கோரையாறு தண்ணீர் கதவனை திறந்துவிடப்பட்டு கடலில் வீணாகி செல்கிறது. இதனைத்தடுக்க பல முறை பொதுபணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று (நேற்று) நாங்கள் திரண்டு வந்ததும் கதவணையை மூடுகிறார்கள். ஆனால் அனைத்து தண்ணீரும் கடலுக்கு சென்றுவிட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றார்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment