முத்துப்பேட்டையில் சுற்றித்திறியும் பன்றிகளை அப்புறப் படுத்த பொதுமக்கள் கோரிக்கை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, November 23

முத்துப்பேட்டையில் சுற்றித்திறியும் பன்றிகளை அப்புறப் படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

muthupettai panchayathu new

நவம்பர் 23: தொற்று நோய் பரவுவதற்கு காரணமான முத்துப்பேட்டையில் சுற்றித்திறியும் பன்றிகளை அப்புறப் படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி, 18 வார்டுகள் அடங்கிய ஒரு பகுதியாகும். இங்கு துப்புரவு பணியாளர்கள் நிரந்தரமாக 20 பேரும், தற்காலிக பணியாளராக 22 பேரும் உள்ளனர். இருந்தும் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் குப்பைகள் சேருவதால் அந்த குப்பைகள் அப்புறப்படுத்தி எடுத்துச் செல்வதில் காலத்தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி அசுத்தமாகவும் துற்நாற்றமும் வீசுகிறது. இந்த நிலையில் பேரூராட்சியில் பணியாற்றும் ஒரு சில துப்புரவு பணியாளர்களால் அதிகளவில் பன்றிகள் வளர்க்கப்படுகிறது. தற்பொழுது இந்த பன்றிகள் தேங்கி கிடக்கின்ற குப்பைகளில் மேய்ந்து அசுத்தப்படுத்துகிறது. மேலும் பல வேறு பகுதிகளில் உள்ள கழிவு நீர் சாக்கடைகளில் ஊர்ந்து கிடப்பதால் நகரில் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் மருதங்காவெளி மற்றும் மங்கலூர் பகுதியில் டெங்கு காய்ச்சலும், தெற்கு காடு மற்றும் புது காளியம்மன் கோவில் தெரு பகுதியில் சிக்கன் குனியா நோயும் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல்களும் சமீபத்தில் ஏற்பட்டது. மேலும் தற்பொழுது முத்துப்பேட்டையில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை தேங்கி கிடக்கிறது. அதில் சுற்றித் திறியும் பன்றிகள் சென்று அசுத்தப்படுத்தி வருகிறது. முத்துப்பேட்டையில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் கூட சர்வ சாதாரணமாக பன்றிகள் வந்து செல்கிறது. இந்த பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பல முறை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள் அதிர்ப்தியில் உள்ளனர். 
இது குறித்து தி.மு.க பேரூராட்சி கவுன்சிலர் ஜெகபருல்லா கூறுகையில்: 'துப்புரவு பணியாளர்களால் வளர்க்கப்படும் இந்த பன்றிகளை அகற்றக்கோரி நான் பல முறை பேரூராட்சி தலைவர்களிடமும், செயல் அலுவலர்களிடமும், சுகாதார அலுவலரிடமும் ஏன்? பன்றிகள் வளர்க்கும் துப்புரவு பணியாளரிடமே கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் எங்களை போன்ற மக்கள் பிரதிநிதிகளை திட்டி வருகின்றனர். உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் பேரூராட்சியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்' என்றார். 
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சாகுல் ஹமீது கூறுகையில்: 'பன்றிகளால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எங்களது உறவினர்களுக்கு கூட அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. நானும் பல முறை பேரூராட்சியில் தெரிவித்து விட்டேன். செயல் இழந்த நிர்வாகமாக உள்ளது' என்றார். 
இது குறித்து மனித நேய மக்கள் கட்சி நகரத் துணைச் செயலாளர் முகம்மது நியாஸ் கூறுகையில்: 'முத்துபபேட்டை முழுவதும் பன்றிகள் பேட்டையாக உள்ளது. எங்கு பார்த்தாலும் தேங்கி கிடக்கும் குப்பைகள் சாக்கடைகளில் நூற்றுக்கணக்கான பன்றிகள் மேய்ந்து முத்துப்பேட்டையை நாரடிக்கிறது. தற்பொழுது இப்பகுதி பொதுமக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு வியாதிகளுக்கு இந்த பன்றிகளே காரணம். இதனை அறிந்தும் பேரூராட்சி நிர்வாகம் மௌனம் சாதிக்கிறது. உடனடியாக சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்தாவிட்டால் எங்கள் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here