நவம்பர் 17: முத்துப்பேட்டையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் கடல் சீற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் கடல் சீற்றத்துக்கு முன் கடந்த 14–ந் தேதி முத்துப்பேட்டையை சேர்ந்த புரோஸ்கான் (25). அசரப் அலி(35) ஆகியோர் மீன்பிடிக்க ஒரு படகில் கடலுக்கு சென்றனர். இருவரும் 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இருவரும் கடல் பகுதியில் முகாமிட்டு இருக்கலாம் என்று பெற்றோர் நினைத்தனர்.
இந்நிலையில் புரோஸ்கான் இலங்கையிலிருந்து அங்கு உள்ள ஒரு மீனவரின் செல்போனிலிருந்து தந்தை சேக்முகம்மதுக்கு நேற்று மாலை போன் செய்துள்ளார். தாங்கள் இலங்கையில் இருப்பதாகவும், மீன்பிடித்துவிட்டு படகில் தூங்கிய போது இரவு நேரத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக வழி தவறி இலங்கையில் கரை ஒதுங்கியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் சிக்கியுள்ள முத்துப்பேட்டை மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை மீனவ சங்க பிரதிநிதிகள் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment