துபாயில் விமானத்துக்கு இணையாக பறந்து சாதனை படைத்த ஜெட்மேன்கள்! (வீடியோ இணைப்பு) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 7

துபாயில் விமானத்துக்கு இணையாக பறந்து சாதனை படைத்த ஜெட்மேன்கள்! (வீடியோ இணைப்பு)





நவம்பர் 07: பறவை மனிதர் என்றழைக்கப்படும் வெஸ் ரொசி 55 வயதான‌ இவர் ஜெட்பேக் கருவி மூலம் பறக்கும் உலகின் முதல் ஜெட்மென் ஆவார். இவரும் மற்றொரு வீரரான வின்ஸ் ரிபெட் என்ற 30 வயதுடைய‌ சகவீரருடன் சமீபத்தில் துபாயில் ஜெட்பேக் உதவியுடன் நகரை சுற்றி பறந்து சாதனை படைத்தனர். 

ஜெட்மேன்கள் என்றழைக்கப்படும் இவர்கள் தற்போது மற்றொரு சாதனையாக உலகின் மிகபெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எமிரேட்ஸ் நிறுவனத்தின் ஏ380 விமானத்துடன் அதற்கு இணையாக துபாயில் பாம் ஜீமைரா தீவு, புர்ஜ் கலிபா உயரமான கட்டிடம் அமைந்துள்ள பகுதிகளுக்கு மேலே பறந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளனர்.

4000 அடி உயரத்தில் பறந்த எமிரேட்ஸ் விமானத்துக்கு மேலே 5000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து வானில் பறக்க உதவும் ஜெட்பேக் கருவியை ஜெட்மேன்கள் இருவரும் உடலில் இணைத்து விமானத்துக்கு இணையாக குறிப்பிட்ட நேரம் பறந்தனர். இக்காட்சிகள் வீடியோவாக‌ பதிவு செய்யப்பட்டது. 3 மாதங்களாக திட்டமிடப்பட்டு ஜெட்மேன்கள் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு பணிகள் உறுதி செய்யப்பட்டு இச்சாதனை நிகழ்த்தப்பட்டதாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இது பற்றி ஜெட்மேன்கள் கூறுகையில் இது போன்று பறப்பது கனவாக இருந்தது. பறக்கும் போது சிலிர்ப்பாக இருந்தது. இதனை நிறைவேற்ற உதவிய எமிரேட்ஸ் நிறுவனத்தாருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். வானில் விமானம் அருகில் பறக்கும் போது மிகபெரிய கழுகு அருகில் கொசு பறப்பது போன்று உணர்ந்தோம் என்றார்

video.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here