பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்ட தனியார் பஸ் கவிழ்ந்து பள்ளி ஆசிரியை பலி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 7

பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்ட தனியார் பஸ் கவிழ்ந்து பள்ளி ஆசிரியை பலி.





நவம்பர் 07: பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு இன்று காலை தனியார் பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் காலை 8.30 மணியளவில் தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டை சைதாம்பாள்புரத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ் திடீரென நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த 3 தென்னை மரம் மீது மோதியது. இதில் மரம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் பஸ் கட்டுக்குள் அடங்காமல் நடு ரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஒரத்த நாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த துர்காதேவி (25) சம்பவ இடத்திலே பலியானார்.

அவர் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக திருச்சிக்கு ஜவுளி எடுக்க செல்ல தஞ்சைக்கு வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.

இவரது தந்தை சந்திரகாசன். இவர் இறந்து விட்டதால் தாய் பிச்சையம்மாள் பராமரிப்பில் இருந்து வந்தார்.

பஸ் பயணிகள் 20–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்த ஜே.சி.பி. எந்திரம் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினார்கள்.

பஸ் டிரைவர் வேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தகவல்: அதிரை நியூஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள facebook பக்கத்தை கிளிக் செய்யுங்கள்
https://www.facebook.com/muthupettaibbcnews

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here