நவம்பர் 14: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஃபேஸ்புக்கில் விமர்சித்த பிரபல வக்கீலை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியை அடுத்த தேனாடு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதரன் (40). வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
இவர் மீது அதிமுக நகரச் செயலாளர் தேவராஜ் ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், வக்கீல் ஸ்ரீதரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுப்படுத்தி படம் மற்றும் செய்தி வெளியிட்டுள்ளார், எனவே மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, இது குறித்து வக்கீல் ஸ்ரீதரன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஊட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment