நவம்பர் 14: பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, மற்றும் 7 இடங்களில் நடந்த சம்பவங்களில் 158 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வடக்கு பாரீஸ் நகரில் பிரான்ஸ்-ஜெர்மனி கால்பந்து போட்டி நடந்த மைதானத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் கால்பந்து மைதானத்தில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா ஹால் உள்ளது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் திடீரென சரமாரியாக சுட்டான். பலர் அலறியடித்து ஓடினர் 158 பேர் பலி இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர்பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
மேலும் 100 பேர் பிணைக்கைதிகளாக சிக்கியுள்ளனர். இந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரீஸ் நகரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பின்னர் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 158பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பீதி இது பயங்கரவாத தாக்குதல் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த சம்பவம் பிரானஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாரீஸ்நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.
இந்நிலையில் அங்கு 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவசரநிலை பிரகடனம் சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தினார். பிரான்ஸ் தலைநகரில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஹோலாண்டே. மேலும் சர்வதேச எல்லைகளை மூடவும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment