நவம்பர் 16: முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழையால் தொழிலாளர்கள் வேலையிழந்து வீட்டில் முடங்கியுள்ளனர். முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதி ஆற்றுகரைகள் உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
தீபாவளிக்கு கடன் வாங்கி செலவு செய்த பெரும் பாலான கூலி தொழிலாளர்கள் தொடர் மழை காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கியுள்ளனர். பலரும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பரிதவித்துவருகிறனர். மேலும் குன்னலூர், எக்கல், கடம்பைவிளாகம், குடிசேத்தி போன்ற தாழ்வான பகுதியில் சாகுபடி வயல் முழுவதும் மழை நீர் வடிய வழியின்றி தேங்கி உள்ளது. இதானல் விவசாயிகள் விவசாய வேலைகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முத்துப்பேட்டை பகுதியை அமைச்சர் காமராஜ், கலெக்டர் மதிவாணன் தலைமையிலான குழு பார்வையிடவந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடாமல் பாதிப்பில்லாத பகுதிகளை கடமைக்கு பார்த்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment