முத்துப்பேட்டையில் தொடர் மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, November 16

முத்துப்பேட்டையில் தொடர் மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.




நவம்பர் 16: முத்துப்பேட்டையில் தொடர் மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது48). மீனவரான இவர், மண் சுவரால் ஆன கூரை வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் முன்பக்க சுவர் தீடீரென இடிந்து விழுந்தது.
இதில் வீட்டில் இருந்த மணிகண்டன், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் 2 பேர் என மொத்தம் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவிலூர் ஊராட்சி தலைவர் ரவி, வருவாய் அலுவலர் முருகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய வீட்டு சுவரும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து ராஜா மற்றும் அவருடைய குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here