முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, November 2

முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்.


நவம்பர் 02: முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து  கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம். 
முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கோ.அருணாச்சலம் (அ.தி.மு.க) தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் அப்துல் வகாப் (அ.தி.மு.க) முன்னிலை வகித்தார். பின்னர் உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற்றது. இதில் தி.மு.க கவுன்சிலர் ஜெகபருல்லா பேசுகையில்: அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளது. எங்கு பார்த்தாலும் காய்ச்சல் அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புகள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார். தி.மு.க கவுன்சிலர் அய்யப்பன் பேசுகையில்: ஒன்றிய குழு அலுவலகம் அருகில் உள்ள இரும்புகடையால் கழிவுப் பொருட்கள் தேங்கி கொசு உற்பத்தி பெருகிறது. சம்மந்தப்பட்ட இரும்பு கடையை உடனடியாக அகற்ற வேண்டும். புதுக்காளியம்மன் கோவில் தெருவில் பயன்பாட்டில் இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைமை வாய்ந்த வாருவாய் அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றார். தி.மு.க கவுன்சிலர் கிருஷ்ணன் கூறுகையில்: பேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் டேப் பழுதடைந்து உள்ளதால் குடிநீர் வீணாகி சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. உடனே இதனை சரி செய்ய வேண்டும் என்றார். பா.ஜ.க கவுன்சிலர்கள் மாரிமுத்து மற்றும் செந்தில் குமார் ஆகியோர் பேசுகையில்: குடிநீர் வசதி இல்லாத 1, 17, 18 ஆகிய மூன்று வார்டு மக்களுக்காக சமீபத்தில் 14 லட்சம் செலவில் குடிநீர் டேங் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதுநாள் வைர பணி துவங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதி படுகின்றனர். அதே போல் வடிக்கால் வசதி செய்து தர கோரினோம். இரண்டு பணியும் நடைபெறவில்லை. அதனால் இந்த அ.தி.மு.க பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம் என்று கூறினர். பின்னர் பா.ஜ.க கவுன்சிலர்கள் மாரிமுத்து, செந்தில்குமார் ஆகிய இருவரும் தலைவர் இருக்கை எதிரே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை கண்ட பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் கூடத்தை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் பா.ஜ.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்ததால் நீண்ட நேரத்திற்கு பிறகு துணைத் தலைவர் அப்துல் வகாப் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் 'இன்னும் இரண்டு தினங்களில் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு அளவீடு செய்து பணி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தார். அதன் பின்னர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பா.ஜ.க கவுன்சிலர்கள் எழுந்து சென்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மெட்ரோ மாலிக், சேவியா, தம்பி மரைக்காயர், ஜெய்புநிஷா பகுருதீன், பாவா பகுருதீன் உட்பட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here