நவம்பர் 02: முத்துப்பேட்டை 8-வது வார்டில் அடிப்பகுதி பெயர்ந்து ஆபத்தான நிலையில் நிற்கும் மின் கம்பம். முத்துப்பேட்டை பேரூராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட சரிப் தெருவில் உள்ள ஒரு மின் கம்பம் அடிப்பகுதியில் சிமிண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்து அதன் கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளன. 4 தெருக்கள் சந்திக்கும் மையப்பகுதியில் இந்த மின்கம்பம் உள்ளதால் எந்த நேரமும் கீழே விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படுகிறது. மேலும் அதன் அருகே ஏரளமான கூரை வீடுகளும் கட்டிடங்களும் நிறைந்து நெருக்கமான பகுதியாக இருப்பதால் இந்த சேதமான மின் கம்பம் மூலம் விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் மக்கள் உயிர் தப்பிக்க வழியில்லாத நிலையில் உள்ளது.
மேலும் இவ்வழியாகத்தான் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு பகுதிக்கு செல்லும் முக்கிய பகுதியாகவும் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் இப்பகுதியில் விளையாடும் தெருவாகவும் உள்ளதால் இந்த மின் கம்பம் மூலம் பல உயிர்கள் பலியாக வாய்ப்புகள் உள்ளன. இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த மின் கம்பத்தை மாற்றி தர வேண்டும் என்று முத்துப்பேட்டை மின்சார வாரியத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுக் கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆசிக், பைசல் ஆகியோர் கூறுகையில்: எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தால் எங்களுக்கும் இப்பகுதி மக்களுக்கு பயமாக உள்ளது. இதனை மாற்றி தர வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியும் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் காலத்தாமதம் படுத்தாமல் மின்சார வாரியம் இந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி வேண்டும் என்றனர்.
தகவல: நிருபர் மு.முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment