நவம்பர் 03: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தியாகி முத்துதேவர்(97), சுதந்திபோராட்ட தியாகியான இவர் இந்திய தேசியராணுவத்தில் நேதாஜி படை பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். ராணுவ பணிக்கு பிறகு ஜாம்புவானோடை தர்கா அஞ்சலகத்தில் 20-ஆண்டுகள் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றினார். பின்னர் ஹோமியோபதி டாக்டராகி மருத்துவம் பார்த்து வந்தார். முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் 5வருடம் ஹிந்தி பண்டிட்டாகவும் பணிபுரிந்துள்ளார்.
தற்பொழுது தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதார்ர்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 5- மகன்கள் 2-மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் தலையில் ஏற்ப்பட்ட கட்டியின் காரணமாக சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 40-நாட்களாக ஆஸ்பத்திரியிலிருந்த தியாகி முத்துதேவருக்கு தலையில் இரண்டு ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. சிகிச்சைக்கு பிறகு நலமுடனிருந்த அவருக்கு நேற்று முன்தினம் தையல் பிரிக்கப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்களின் கவனக்குறைவால் அவர் மயக்கமடைந்தாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போதிய சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை தியாகி முத்துதேவர் உயிரிழந்தார். தியாகியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து அவரது மகனும் தேமுதிக தலைமை கழக பேச்சாளருமான முத்து.வீரவேல் கூறுகையில்: தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 40 நாட்களாக தங்க வைக்கப்பட்டு என் தந்தைக்கு தலையில் இரண்டு ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. சிகிச்சைக்கு பிறகு நடந்து செல்லும் அளவில் நலமுடனிருந்த அவருக்கு நேற்று முன்தினம் தையல் பிரிக்கப்பட்டது. மருத்துவர்களின் கவனக்குறைவால் அவர் மயக்கமடைந்தார். இதனை தொடர்ந்து போதியசிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி எனது தந்தை உயிரிழந்தார் என குற்றம் சாட்டினர்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment