முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு இலவச பொருட்கள் வந்தது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 3

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு இலவச பொருட்கள் வந்தது.



நவம்பர் 03: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு இலவச பொருட்கள் வந்தது. முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற சென்ற மாத கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் முத்துப்பேட்டை பகுதிக்கு இன்னும் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி பேசினார். இதன் எதிரொலியாக நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதி மக்களுக்கு வழங்கவதற்காக இலவச பொருளான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை லாரி மூலம் வந்து இறங்கியது. இதனால் மக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அ.தி.மு.க கவுன்சிலர் நாசர், தி.மு.க கவுன்சிலர் ஜெகபருல்லா ஆகியோர் கூறுகையில்: தமிழக அரசின் விலையில்லா இந்த பொருட்களை வழங்க வேண்டும் என்று நான்கு வருடமாக கோரிக்கை விடுத்து வந்தோம் எந்த பலனுமில்லை. சென்ற மாதம் பேரூராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து தினகரனில் செய்தி வெளியானதால் இதன் எதிரொலியாக தற்பொழுது இப்பகுதி மக்களுக்காக மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வந்து இறக்கப்பட்டது. தக்க சமயத்தில் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

தகவல் : நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here