அக்டோபர் 29: 36 ஆண்டுகளுக்குப் பின் "ஒரே குழந்தை திட்டத்தை" கைவிடுவதாக சீனா அறிவித்துள்ளது. இன்று முதல் சீனர்கள் அரசின் அனுமதி இல்லாமல் இரண்டாவது குழந்தையையும் பெற்றுக் கொள்ளலாம்.
குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தோல்வியிலேயே முடியும். இவை அவசியமற்றத் திட்டங்கள். இவற்றைச் செயல்படுத்துவதற்குப் பதில், குடும்பத்தை நிர்வகிக்கும் கடமை ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ளதைப் புரிய வைத்தாலே போதுமானது.
தன்னுடைய குழந்தையை நோயற்றதாக, அறிவானதாக, சமூக நோக்கமுடையதாக வளர்க்க, நிர்வகிக்க ஒரு பெற்றோருக்கு எந்த அளவுக்குத் தகுதி உண்டோ அந்தளவுக்குக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளட்டும். இந்தத் தகுதி ஒவ்வொருவரின் உடலமைப்புக்கும் திறமைக்கும் ஏற்ப மாறுபடலாம். எண்ணிக்கையப் பெற்றோரே முடிவு செய்யட்டும்.
சீனாவைப் போல் இந்தியாவில் தடைகள் எதுவும் இல்லை. ஆனால், அதிக குழந்தைகள் பெறுவதற்கு எதிராக விளம்பரங்களைச் செய்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இரண்டு குழந்தைகள் போதும் என்று கூறி வந்த இந்திய அரசு, அண்மைக்காலமாக One is Fun என்று ஒரு குழந்தையே போதும் என வலியுறுத்தி வருகிறது.
விரைவில் சீனாவைப் போன்று இந்தியாவும் ஒன்றிலிருந்து இரண்டுக்கு மாறக்கூடும். ஆனால், அதைவிடச் சிறந்தது, "எண்ணிக்கையை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். குழந்தை ஆரோக்கியமாகவும் அறிவானதாகவும் சமூக நோக்குள்ளதாகவும் இருக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தி விளம்பரம் செய்தால் போதுமானது.
தகவல்: அப்துல் கரீம்
No comments:
Post a Comment