நவம்பர் 14: துபாய்,வளைகுடா மற்றும் இந்தியாவில் பல கிளைகளை கொண்ட அட்ல்ஸ் ஜுவல்லரி உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு போலி செக் கொடுத்து வங்கிகளை ஏமாற்றியதாக சில துபாய் வங்கிகள் புகார் கொடுத்ததை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு துபாய் போலீசார் கைது செய்து வீட்டு காவலில் வைத்திருந்தது.
இவர் துபாயில் உள்ள வங்கிகளில் இருந்து 3.4 லட்சம் திஹாரம் கடன் எடுத்து திரும்பி கட்ட வங்கிகளுக்கு கொடுத்த செக் அனைத்து பணம் இல்லமால் திரும்பியதை தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.
இதை தொடர்ந்து வங்கி கடனை திருப்பி கட்ட கொடுத்த காலக்கெடு முடிந்ததை தொடர்ந்து இன்று துபாயில் கீழ் நீதிமன்றம் 3 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்து. வீதியை கேட்ட அவருடைய மணைவி நீதிமன்றத்தில் கதறி அழுதார். இதை தொடர்ந்து துபாய் உயர் நீதிமன்றத்தில் பணம் கட்ட இன்னும் சிறிது கால அவகாசம் கேட்டு வழக்கு தொடர உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தகவல்: வீகளத்தூர்
No comments:
Post a Comment