முத்துப்பேட்டை அருகே கார் அடித்து உடைப்பு. ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரி படுகாயம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 11

முத்துப்பேட்டை அருகே கார் அடித்து உடைப்பு. ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரி படுகாயம்.


அக்டோபர் 11: முத்துப்பேட்டை அருகே ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரி சென்ற கார் அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் முருகேசன்(34), இவர் முத்துப்பேட்டை அடுத்த கல்லடிக்கொள்ளைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே போல் சூசை ரெத்தினம்(40). இவர் முத்துப்பேட்டை புதுத்தெரு பள்ளியில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளராக உள்ளார். தினமும் இருவரும் மன்னார்குடியிலிருந்து ஆசிரியர் முருகேசன் காரில் முத்துப்பேட்டைக்கு வந்துவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பணிகள் அதிகமாக இருந்ததால் காலத்தாமதமாக மன்னார்குடி செல்ல முத்துப்பேட்டையிலிருந்து சென்றனர். 

கோவிலூர் கோட்டகம் வளைவு சாலையில் கார் சென்றுக் கொண்டிருக்கும் போது 5-க்கும் மேற்பட்ட பைக்கில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட ஒரு கும்பல் இருவரும் சென்ற காரை வழிமறைத்து கட்டையாலும் கல்லாலும் சரமாரியாக தாக்கியது. இதில் காரில் இருந்த முருகேசனும், சூசை ரெத்தினமும் சத்தம் போட்டனர் இருந்தும் அந்த கும்பல் சரமாரியாக காரை அடித்து நொருக்கிவிட்டு தப்பினர். இதில் ஆசிரியர் முருகேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சூசை இரத்தினம் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் இருவரும் முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். 
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடைக்கப்பட்ட காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் முருகேசனின் சொந்த ஊர் நாகை மாவட்டம் துளைசியாப்பட்டினம் அடுத்த வன்டுவாஞ்சேரி கிராமம் என்றும் அங்கு ஆசிரியர் முருகேசனின் சொந்தமான வீட்டு அருகே முத்தரையர் சங்க கொடி மரம் ஏற்றும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் அவரது தந்தை மருதமுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வட்டாட்சியர் மூலம் அந்த கொடி கம்பத்தை அகற்றியதாக தெரிகிறது. 
இதில் ஏற்பட்ட முன்விரோத காரணமாகதான் ஆசிரியர் முருகேசனை அந்த கும்பல் தாக்க வந்ததாத முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here