அக்டோபர் 11: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வரும் 'செய்'தீ க்களை மட்டுமே நம்பி 'பொங்கல்' வைப்பது எத்தனை தவறானது என்பதை நேற்றைய இரு செய்திகளும் உணர்த்தியுள்ளன.
முதலாவது செய்தி). சவூதியில் ஓர் இந்திய(தமிழக)ப்பணிப்பெண்ணின் கையை அப்பெண்ணின் (கஃபீல்) முதலாளியான சவூதிக்காரி துண்டித்துவிட்டார் என்ற ஶசெய்தி. இதன்பொருட்டு மத்திய அமைச்சர் சுஷ்மா கூட ட்விட்டரில் அரசியல்நோக்கில் பொங்கியிருந்தார்.
இப்போது அறியப்படும் உண்மை. அப்பெண்ணின் கையை யாரும் துண்டிக்கவில்லை. மாறாக மாடியிலிருந்து குதித்துத் தப்பிக்க முயன்ற போது (Electric Transformer) மின்மாற்றியகத்தில் மோதி விழுந்ததில் கை மருத்துவமனையில் துண்டிக்கப்பட வேண்டிய கட்டாயமானது.
இரண்டாம் 'செய்'தீ : உ.பியில் ஒரு தலித் குடும்பம் காவல்துறையால் நிர்வாணப்படுத்தப்பட்டதாக வந்த செய்தி
விசாரணையில் தெரிந்த உண்மை: தங்கள் முறையீட்டு மனு காவல்துறையால் ஏற்கப்படாத கோபத்தில் அக்குடும்பத் தலைவனே இந்த அநாகரிக அழிச்சாட்டியத்தை அரங்கேற்றியுள்ளதாக.
ஆகவே, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் 'செய்'தீ அனுப்புபவர்களே, இனியேனும் ஆராயாமல் எதையும் தலைகீழாக 'தீ'செய் யாதீர்கள். நல்லா இருப்பீங்க ... .
தகவல்: வீகளத்தூர்.இன்
No comments:
Post a Comment